22 வருடங்களுக்கு பின் அதே கமல் பட பாடல் புதிய உருவாக்கத்தில்! குஷ்பு வெளியிட்ட வீடியோ

கமல் – குஷ்பூ பட பாடல் மீண்டும் ஒரு படத்தில் உருவெடுத்துள்ளது!

கமல், குஷ்பூ, ஊர்வசி நடிப்பில் 22 வருடங்களுக்கு முன் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ எனும் படத்தில் சூப்பர் ஹிட் பாடல் மீண்டும் தனது படத்தில் இடம்பெற்றுள்ளதாக நடிகை குஷ்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Kushboo, Sundar C, Coffee With Kadhal, Tamil Cinema 01-July-2022 002

இந்த படத்தில் கமல் ,குஷ்பூ நடனமாடிய ‘ரம் பம் பம்’ என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டானது என்பதும் இன்றும் அந்த பாடல் ரசிகர்களின் மத்தியில் விருப்பத்துக்குரிய பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் உருவான ‘காபி வித் காதல்’ என்ற படத்தில் அதே ‘ரம் பம் பம்’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது என அறிவித்துள்ள குஷ்பு, இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இந்த பாடல் இன்று ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்துள்ளார்.

Kushboo, Sundar C, Coffee With Kadhal, Tamil Cinema 01-July-2022 001

ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களும், அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று ஹீரோயின்களின் நடிப்பில்,மற்றும் விஜய் டிவி பிரபலம் டிடி உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

adbanner