20 வருடத்தின் பிறகும் இன்னும் அவர் மாறவே இல்லை – சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு!

மாதவன் குறித்து சிம்ரன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள கருத்து வைரல்!

மாதவன் மற்றும் சிம்ரன் நடித்த ‘ராக்கெட்டரி’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வரும் நிலையில், மாதவனுடன் நடித்த அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியான பதிவை நடிகை சிம்ரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Collage Maker-01-Jul-2022-12.50-PM

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்த போது, ‘பார்த்தாலே பரவசம்’ படத்தில் மாதவனுடன் நடித்த சிமி கேரக்டர் மற்றும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் மாதவனுடன் நடித்த இந்திரா கேரக்டரை அடுத்து தற்போது ‘ராக்கெட்டரி’ படத்தில் நடித்த மிஸிஸ் நம்பி நாராயணன் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் என்றும் இந்த 20 வருடங்களில் மாதவன் கொஞ்சம்கூட மாறவில்லை என்றும் அவர் மிகச் சிறந்தவர் என்றும் பதிவு செய்துள்ளார்.

Collage Maker-01-Jul-2022-12.51-PM

மேலும் உங்களுடன் திரையுலகை பகிர்ந்து கொண்டதோடு நீங்கள் இயக்கும் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்றும் சிம்ரன் குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.