சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பயணிக்கும் சிம்பு!

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதியும், சிம்பு நடித்த இன்னொரு திரைப்படமான ‘மஹா’ திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதியும் ரிலீஸ் ஆக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Simbu, Pathu Thala, Tamil Cinema 01-July-2022

இந்நிலையில் சிம்பு நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான ‘பத்து தல’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘மஃப்டி’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘பத்து தல’ படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர். சூர்யா-ஜோதிகா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும், ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu, Pathu Thala, Tamil Cinema 01-July-2022 001

இந்நிலையில் தற்போது ‘பத்து தல’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு வெளியான சிம்புவின் ‘மாநாடு’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இனி வரவிருக்கும் மாதங்களில் சிம்புவின் மேலும் 3 படங்கள் வெளியாக உள்ளதால் ஹாட்ரிக் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.