சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட்! வைரல் புகைப்படங்கள்!

சந்தானம் அடுத்த படத்தின் புகைப்படங்களுடன் வைரல்!

சந்தானம் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் சூப்பர் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Santhanam, Tamil Cinema 01-July-2022 002

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’, ‘குலுகுலு’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றது.

Santhanam, Tamil Cinema 01-July-2022 001

இந்நிலையில் சந்தானம் நடிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார் என்பதும், மேலும் இந்த படத்தில் ராகினி திவேதி, பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மனோபாலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Santhanam, Tamil Cinema 01-July-2022

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, லண்டன், பாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் அப்டேட் தந்துள்ளனர். விரைவில் இந்த படத்தை திரையில் காணலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளதால் சந்தானம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.