சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சூர்யா பட நடிகை! இணையத்தை கலக்கும் சூப்பர் அப்டேட்

சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல நடிகை!

பாகுபலி ,ஆர்.ஆர்.ஆர், புஷ்பா படங்களுக்குப் பின் தெலுங்கு சினிமாவின் மீது இந்திய ரசிகர்களின் கவனம் திரும்பியது போல், தெலுங்கு சினிமா நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் பல மொழிகளில் வரவேற்பு கிடைத்துள்ளது.

Sivakarthikeyan, Krithi Shetty, Tamil Cinema 30-June-2022

அந்த வகையில், தெலுங்கில் ஹிட் கொடுத்த ‘உப்பென்னா’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. இவர் தற்போது லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொதினேனிக்கு ஜோடியாக ‘தி வாரியர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் கீர்த்தி ஷெட்டி பாலாவின் இயக்கத்தில், சூர்யாக்கு ஜோடியாக ‘கடலாடி’ படத்திலும் நடித்து வருகிறார்.

Sivakarthikeyan, Krithi Shetty, Tamil Cinema 30-June-2022 001

இந்நிலையில், மண்டேலா பட இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.