மறுபடியும் சிம்புவுடன் மோதும் பிரபல நடிகர்!

மூன்றாவது முறையாக சிம்புவுடன் மோதும் பிரபல நடிகரின் படம்!

நடிகர் சிம்பு நடித்த படங்கள் ரிலீஸ் ஆன அதே நாளில் பிரபல நடிகரின் படங்கள் ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் ஆன நிலையில், தற்போது மூன்றாவது முறையாக, வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி இரு நடிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Simbu, Jayam Ravi, Vendhu Thanindhathu Kaadu, Agilan, Tamil Cinema 30-June-2022 001

நடிகர் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதே நாளில் ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ திரைப்படமும் வெளியாக உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கபட்டுள்ளது. இருப்பினும் இரு திரைப்பட குழுவும் தங்கள் ரிலீஸ் தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளதால், செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ஜெயம்ரவியின் ‘அகிலன்’ ஆகிய திரைப்படங்கள் மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Simbu, Jayam Ravi, Vendhu Thanindhathu Kaadu, Agilan, Tamil Cinema 30-June-2022

ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துடன் ஜெயம் ரவியின் ‘வனமகன்’ திரைப்படம் மோதியது என்பதும் அதேபோல் 2021ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று சிம்புவின் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்துடன் ஜெயம் ரவியின் ‘பூமி’ திரைப்படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது, இதில் ‘ஈஸ்வரன்’ திரையரங்கிலும் ‘பூமி’ ஓடிடியிலும் ரிலீஸ் ஆனாலும் இரண்டு திரைப்படங்களிலும் நிதி அகர்வால் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.