3 வருடங்களுக்கு பின் துபாயில் முதலமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்!

கமல்ஹாசன் துபாயில் முதலமைச்சரை சந்தித்த புகைப்படங்கள் வைரல்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அங்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களை சந்தித்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்த புகைப்படங்களும் இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Kamal Hassan, Tamil Cinema 30-June-2022 004

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து தமிழ் திரை உலகில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் தற்போது துபாய் சுற்றுப்பயணத்தில் உள்ளார். அங்கு அவர் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிட்ரேட் அமைச்சர் முபாரக் அல் நய்னனை சந்தித்த நிலையில் தற்போது துபாயில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களை சந்தித்து உள்ளார்.

மற்றும் கமல்ஹாசன் கடந்த 2009 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த புதிதில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களை சந்தித்தார் என்பதும் தற்போது மூன்று வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இந்த சந்திப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Hassan, Tamil Cinema 30-June-2022 002
Kamal Hassan, Tamil Cinema 30-June-2022 003
Kamal Hassan, Tamil Cinema 30-June-2022 001
Kamal Hassan, Tamil Cinema 30-June-2022