ரோலக்ஸை அடுத்து சூர்யாவுக்கு ஒரு சூப்பர் கேரக்டர் கொடுத்த இயக்குனர்! வேற லெவல் அப்டேட்

சூர்யாவின் அடுத்த படத்திற்கான செம கேரக்டரும் பிரபல இயக்குனர் குறித்த தகவல்!

சமீபத்தில் வெளியான கமலின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு அடுத்ததாக வித்தியாசமான சூப்பர் கேரக்டரை பிரபல இயக்குனர் வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

Suriya, Ravikumar, Tamil Cinema 30-June-2022

இந்நிலையில் ‘இன்று நேற்று நாளை’ மற்றும் ‘அயலான்’ படங்களை இயக்கிய ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தில் சூர்யாவுக்கு விஞ்ஞானி கேரக்டர் கொடுக்கப்படுவதாகவும், இந்த கேரக்டருக்கு சூர்யா கச்சிதமாக பொருந்துவார் என்றும் இயக்குனர் ஆர். ரவிக்குமார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suriya, R. Ravikumar, Tamil Cinema 30-June-2022

‘விக்ரம்’ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, மாதவனின் ‘ராக்கெட்டரி’ மற்றும் அக்சய் குமார் நடித்து வரும் ‘சூரரைப்போற்று’ ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

adbanner