ரசிகருக்கு போன் அழைப்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்! வீடியோ வைரல்

ரசிகருக்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியடைய வைத்த தல அஜித்!

இலங்கையை சேர்ந்த ரசிகர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித், ‘நல்லா இருங்க.. ஆரோக்கியமாக இருங்க.. சந்தோசமா இருங்க..’ என்று கூறிய வீடியோ மற்றும் எழுத்து மூலம் கொடுத்துள்ள வாழ்த்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith, Tamil Cinema 30-June-2022 001

அஜித் தற்போது வெளி நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்யும் அவரது புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் அஜித் சமீபத்தில் பிரிட்டன் நாட்டிற்குச் சென்று இருந்தபோது அங்கிருந்த ரசிகர் ஒருவர் அஜீத்தை அணுகி, ‘தன்னுடைய நண்பர் ஒருவர் உங்களுடைய தீவிர ரசிகர் என்றும், இலங்கையை சேர்ந்த அவருக்கு இன்று பிறந்தநாள் என்றும் நீங்கள் வாழ்த்து தெரிவித்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்’ என்று கூறியுள்ளார்.

Ajith, Tamil Cinema 30-June-2022

இதனை தொடர்ந்து உடனடியாக அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அஜித் அந்த ரசிகருடன் பேசியுள்ளார். ரசிகருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அஜித், ‘நல்லா இருங்க.. ஆரோக்கியமா இருங்க.. சந்தோஷமா இருங்க’ என்று கூறியுள்ளார். அஜித்தின் எதிர்பாராத அழைப்பை கேட்ட அந்த லாவன் என்ற இலங்கை ரசிகர் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார். மாற்று அந்த ரசிகர் அஜித்திடம் நீங்கள் நல்லா இருந்த அது போதும் சார் என்று அவரின் அளவற்ற அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.