பிக்பாஸ் ஆரி நடித்த ‘போதைக்கு எதிரான போர்’ விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு!

சமூக கருத்துடன் கூடிய ‘போதைக்கு எதிரான போர்’ கூறும் படம் வெளியானது!

பிக்பாஸ் ஆரி நடிக்கும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் ( War On Drugs) ‘போதைக்கு எதிரான போர்’ என்ற தலைப்பில், வேலூர் காவல்துறை டிஐஜி டாக்டர் Z ஆனி விஜயா. ஐபிஎஸ் & டாக்டர் கே.எஸ். பாலகிருஷ்ணன், BVSc ஆகியோர் வெளியிட்டனர்

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்த இந்த குறும்படத்தை நேற்று காலை தொடங்கி வைக்கப்பட்டது. திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை டிஐஜி டாக்டர் Z ஆனி விஜயா ஐபிஎஸ் & டாக்டர் கே.எஸ். பாலகிருஷ்ணன் BVSc ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

Aari Arujunan, War On Drugs, Tamil Cinema 30-June-2022

போதைப்பொருள் பழக்கம் நம் இளைய சமுதாயத்தை முற்றிலுமாக அழித்து கொண்டிருக்கிறது. சிறிதாக ஆரம்பமாகும் இப்பழக்கம் நம்மை அடிமையாக்கி நம் வாழ்வையே முற்றிலுமாக அழித்து விடுகிறது. போதைப்பழக்கத்தில் சிக்கிகொள்வோரை மீட்க அரசும் காவல்துறையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு முயற்சியாக போதைப்பொருள் பயன்பாட்டின் கெடுதல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த குறும்படம் உருவாகியுள்ளது.

‘போதைக்கு எதிரான போர்’ எனும் இந்த குறும்படத்தில் நட்சத்திர நடிகர் ஆரி அர்ஜுனன் நடித்துள்ளார். திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்தின் முன்னாள் இணை இயக்குனரான திரு. காகா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை ஆர்கேஜி குரூப்பின் திரு. ஜி.சந்தோஷ் குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கேபி இசையமைக்க, ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Aari Arujunan, War On Drugs, Tamil Cinema 30-June-2022 001

மேலும் தொழில்நுட்பக் குழுவில் தமிழ் அரசன் (எடிட்டர்), வி ஆர் ராஜவேல் (கலை), தியாகராஜன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வில்பிரட் தாமஸ் (கிரியேட்டிவ் குழு), எம்.ஜே ராஜு (ஒலி வடிவமைப்பாளர்), வீர ராகவன் (டிஐ கலரிஸ்ட்), வசந்த் (கன்ஃபார்மிஸ்ட்) , வி வேணுகோபால் (தயாரிப்பு மேலாளர்), திலக்ராஜ் எம் (தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்), வினோத் குமார் (ஒருங்கிணைப்பாளர்), சதீஷ் (விஎஃப்எக்ஸ்), சஜித் அலி (வசனங்கள்), யுவராஜ் (வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை & RKG Infotainment இணைந்து பொதுமக்கள் நலன் கருதி இந்த குறும்படத்தினை வெளியிட்டுள்ளனர்.

adbanner