உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘விக்ரம்’ பட ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்துள்ள நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

Kamal Haasan, Vikram, Tamil Cinema 29-June-2022

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில், அனிருத் இசையில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றிருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளது. ஹாட்ஸ்டார் ஓடிடியில் ‘விக்ரம்’ படம் ஜூலை 8 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு அது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.