சிம்புவின் எதிர்பார்ப்புக்குரிய அடுத்த பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிம்பு நடித்து வெளியாக இருக்கும் மற்றொரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ‘மஹா’. இந்தப்படம் ஹன்சிகாவின் 50வது படம் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Simbu, Hansika, Maha, Tamil Cinema 29-June-2022

ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி சில முறை அறிவிக்கப்பட்டு ஒருசில எதிர்பாராத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது ‘மஹா’ திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் துவங்க படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu, Hansika, Maha, Tamil Cinema 29-June-2022 001

ஜமீல் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெளியாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.