மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் இந்தியன் 2 படக்குழு! பட்ஜெட்டை குறைக்க கூறி லைகா அழுத்தம்!

இந்தியன் 2 படம் குறித்த பரபரப்பான செய்தி!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது அறிந்ததே. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் தற்போது வரை ஆரம்பிக்கப்படவில்லை.

Kamal Haasan, Indian 2, Tamil Cinema 28-June-2022

படம் குறித்து லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, அதில் சுமூக முடிவு ஏற்பட்டு விட்ட நிலையில், சமீபத்தில் டான் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ‘விரைவில் இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடங்க உள்ளோம்’ எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது இந்தியன் 2 திரைப்படம் பற்றிய மற்றொரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

படத்தைத் தொடங்கும் வேலைகள் ஆரம்பித்துள்ள நிலையில் முதல் வேலையாக படத்தின் பட்ஜெட்டைக் குறைக்க சொல்லி லைகா தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தின் பட்ஜெட்டில் 30 சதவீதத்துக்கும் மேல் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

adbanner