இது உண்மையில்லை, ஆனா கேட்கவும் பாக்கவும் நல்லாயிருக்கு – பிக்பாஸ் ராஜூ தகவல்!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமோகன் என்பது தெரிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவருக்கு ஒருசில திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் அதில் ஒரு சில படங்களில் நடிக்க அவர் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Raju Jeyamohan, Tamil Cinema 28-June-2022

இந்நிலையில் கார்த்தி நடிப்பில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார்’ திரைப்படத்தில் ராஜூ ஜெயமோகன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ராஜூ ஜெயமோகன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சர்தார் திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை. நான் நடித்ததாக வெளிவந்திருக்கும் தகவலில் உண்மை அல்ல’, ‘இருப்பினும் இதுபோன்ற விஷயங்களை கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். ராஜூவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.