சூர்யாவின் ‘ரோலக்ஸ்’ செய்த புதிய சாதனை! இணையத்தில் வைரல்

‘ரோலக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் செய்த சாதனை!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி இந்த படம் 400 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Suriya, Rolex, Kamal, Vikram, Tamil Cinema 27-June-2022

இந்நிலையில் இந்த படத்தில் ‘ரோலக்ஸ்’ என்ற கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார் என்பதும் கடைசி ஐந்து நிமிடங்களில் மட்டுமே சூர்யாவின் ‘ரோலக்ஸ்’ கேரக்டர் தோன்றினாலும் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து அது இன்றுவரை சமூக வலைத்தளங்களில் ஒரு பேசு பொருளாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் ‘விக்ரம்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து லோகேஷ் கனகராஜ்க்கு சொகுசுக்கார், உதவி இயக்குனர்களுக்கு பைக்குகளை பரிசாக வழங்கிய கமல்ஹாசன், சூர்யாவுக்கு தனது ரோலக்ஸ் வாட்சை பரிசாக வழங்கினார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஏற்கனவே வைரலாகி வந்தது.

Suriya, Rolex, Kamal, Vikram, Tamil Cinema 27-June-2022 001

இந்நிலையில் இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை செய்துள்ளது. கோலிவுட் நடிகர் ஒருவரின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் லைக்ஸ் பெறுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

adbanner