விக்ரம் பிரபுவின் அதிரடி ஆக்ஷனில் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ டீஸர் ரிலீஸ்!

விக்ரம் பிரபு நடித்த புதிய படத்தின் டீஸர் வெளியானது!

இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்த அடுத்த திரைப்படமான ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Paayum Oli Nee Yenakku, Vikram Prabhu, Tamil Cinema 27-June-2022

சமீப காலமாக அதிரடி ஆக்ஷன் படங்களை பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து வரும் விக்ரம் பிரபு மற்றொரு ஆக்ஷன் படத்த்தில் நடித்துள்ளார். தற்போது வெளியான இந்த டீசரின் ஒரு நிமிட காட்சியும் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளே உள்ளதால் அச்டின் படங்களின் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Paayum Oli Nee Yenakku, Vikram Prabhu, Tamil Cinema 27-June-2022 001

விக்ரம் பிரபு, வாணிபோஜன், தனஞ்செயா, விவேக் பிரசன்னா உள்படபலர் நடிப்பில் உருவாகி இந்த படத்தை கார்த்திக் அத்வைத் என்பவர் இயக்கியுள்ளார். சாகர் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கார்த்திக் மூவி ஹவுஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.