பிரபல இயக்குனருக்கு நிபந்தனை விதித்த மாஸ் நடிகர்!
‘கேஜிஎப் 2’ படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘சலார்’ என்பதும் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள ஹீரோ பிரித்திவிராஜ் இணைந்துள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இணைந்தது குறித்து பிரித்திவிராஜ் பேசுகையில், ‘பிரபாஸ் மற்றும் பிரஷாந்த் நீல் படத்தில் நடிக்க நோ சொல்ல முடியாது என்றும் மேலும் இந்த படத்தில் நடிக்க நான் இயக்குனரிடம் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டேன்.

அந்த கண்டிஷன் என்னவெனில் இந்த படம் எத்தனை மொழிகளில் ரிலீஸ் ஆனாலும் அத்தனை மொழிகளிலும் நான்தான் சொந்த குரலில் பேசி நடிப்பேன் என்றும் சுமாராக இருந்தாலும் நான்தான் டப்பிங் பேசுவேன் என்றும் கூறினேன் என்று கூறினார். திரும்ப பிரஷாந்த் நீலை இதுகுறித்து பேச சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
I would Love to do that Film, it's a #Prabhas Film, there isn't any thing to say no to it right, It's a Big.. Big Film.? – @PrithviOfficial #Salaar pic.twitter.com/HPCCf35BGC
— . (@charanvicky_) June 26, 2022