யோகி பாபு படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு! செம அப்டேட்

யோகி பாபு நடித்த புதிய படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகிபாபு, கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பன்னிக்குட்டி’. முழுக்க முழுக்க பன்னிகுட்டியுடன் யோகி பாபு அடிக்கும் லூட்டியை, மையப்படுத்தி காமெடியாக இப்படத்தை அனுசரண் இயக்கியுள்ளார்.

Yogi Babu, Panni Kutty, Tamil Cinema 25-June-2022

மேலும் இந்த படத்தில் கருணாகரன், சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, ரி.பி. கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா, ராமர், ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு கிருஷ்ணகுமார் இசையமைக்க, லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

நீண்ட நாட்களாக தயாரிப்பு பணியில் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் ஜூலை 8 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.