தல அஜித்தின் வேற லெவல் மாஸ் புகைப்படங்கள் வைரல்! எப்படி இருக்கார் பாருங்க

அஜித்தின் பக்கா மாஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், உருவாகி வரும் ‘ஏகே 61’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து, அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் நடிகை மஞ்சுவாரியார் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது ஐரோப்பா முழுவதும் இரு சக்கரவாகனத்தில் பயணம் செய்து வரும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இப்போது அஜித் உணவகம் ஒன்றில் இருக்கும் புகைப்படங்களும், கார் அருகில் இருக்கும் மற்றொரு புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலும் ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த திட்டமாக வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மீண்டும் வெளிநாடுகளில் பைக் சுற்றுப்பயணம் செய்ய அஜித் திட்டமிட்டிருப்பதாகவும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்வதே அவரது இலக்கு என்றும் தகவல்கள் தெருவிக்கின்றன.

Exit mobile version