விஜய் சேதுபதியின் நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது – வைரலாகும் இயக்குனர் ஷங்கர் பதிவு!

விஜய் சேதுபதி படம் குறித்து இயக்குனர் ஷங்கர் கருத்து வைரல்!

விஜய் சேதுபதி நடிப்பில், சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் சிறப்புகாட்சி நேற்று திரையிடப்பட்ட நிலையில் இந்தப் படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பார்த்துள்ளார்.

Vijay Sethupathi, Maamanithan, Shankar, Tamil Cinema 24-June-2022 001

இந்த படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் அதன்பிறகு தனது சமூக வலைத்தளத்தில் , விஜய் சேதுபதி, சீனுராமசாமி உள்பட படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் ‘ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை ‘மாமனிதன்’ படம் கொடுத்துள்ளதாகவும் இயக்குனர் சீனு ராமசாமி தனது இதயத்தையும் ஆன்மாவையும் வைத்து யதார்த்தமான படத்தை சிறப்பாக கொடுத்துள்ளார்’ என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதியின் அற்புதமான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது என்றும், இளையராஜாவின் இசை படத்தின் கதையுடன் ஆத்மார்த்தமாக இணைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.