சாய் பல்லவி படம் குறித்த செம அப்டேட்!
‘பிரேமம்’ படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காது இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள ‘கார்கி’ படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ரிலீஸாக உள்ள இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் நேற்று சாய்பல்லவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் ‘நான் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.’ எனக் கூறி ‘கார்கி’ படத்தின் மேக்கிங் வீடியோ துணுக்கை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.