ஜெண்டில் மேன் 2 படம் குறித்து வெளியான செம அப்டேட்!

ஜெண்டில் மேன் 2 படத்தில் இணையும் தேசிய விருது பெற்ற கலைஞர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜென்டில்மேன்’. இது ஷங்கரின் முதல் படமாகும். மதுபாலா, சுபஸ்ரீ, செந்தில், கவுண்டமனி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இந்த படம் அப்போதைய காலத்திலேயே மாபெரும் வெற்றி பெற்றது.

Gentleman 2, Tamil Cinema 24-June-2022 001

நீண்டகால இடைவெளியின் பின் தற்போது ‘ஜெண்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக கே.டி. குஞ்சுமோன் அறிவித்துள்ள நிலையில், இதற்காக தற்போது ‘ஜெண்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமாக தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தின் இயக்குனராக கோகுல் பிரசாத் என்பவரும், இசையமைப்பாளராக மரகதமணியும், படத்தின் நாயகியாக நயன்தாரா சக்ரவர்த்தி என்பவரும் இணைந்திருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது .

Gentleman 2, Tamil Cinema 24-June-2022 001

அந்த வகையில் தற்போது படத்தின் ஒளிப்பதிவாளராக அஜயன் வின்செண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது படத்தின் கலை இயக்குனராக தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்டா தரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை குஞ்சுமோன் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் ஹீரோ யார் என்பதை அறிவிக்கப் பட உள்ளதாக கூறப்படுகிறது.