சினிமாவில் களமிறங்கும் காமெடி நடிகர் செந்திலின் மகன்!அவர மாதிரியே இருக்காரே

நடிகர் செந்தில் மகன் நடிக்கும் படம் குறித்த செய்தி!

தமிழ் சினிமால் நடிகர் செந்தில் 40 ஆண்டுகளுக்கும் அதிகமாக நடித்து வருகிறார். அதிமுக ஆதரவாளராகவும், பேச்சாளராகவும் பல தேர்தல்களில் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த அவர் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘தானா சேந்த கூட்டம்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார்.

Senthil, Bobby Simha, Tamil Cinema 24-June-2022 001

அதன் பிறகு தற்போது அவர் ‘ஒரு கிடாயின் மனு’ படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் பல படங்களிலும் நடித்து வரும் அவர் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Senthil, Bobby Simha, Tamil Cinema 24-June-2022

இந்த படத்தில் செந்திலின் மகன் மருத்துவர் மணிகண்டபிரபு அவருக்கு மகனாகவே நடிக்கிறார். இதன் மூலம் செந்தில் குடும்பத்தில் இருந்து மற்றொரு வாரிசு நடிகர் உருவாகியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் தன் மகனோடு இருக்கும் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.