‘தேவர் மகன் 2’ படத்தில் கமலுக்கு மகனாக இணையும் பிரபல நடிகர்!

‘தேவர் மகன் 2’ படத்தில் இணையும் மற்றுமொரு பிரபல நடிகர் குறித்த செய்தி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் நடித்த ‘தேவர்மகன்’ திரைப்படம் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.

Kamal Haasan, Vijay Sethupathy, Tamil Cinema 24-June-2022 001

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் கமல்ஹாசனின் மகன் கேரக்டர் தான் இந்த படத்தில் முக்கிய கேரக்டராக வலம்வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Kamal Haasan, Vijay Sethupathy, Tamil Cinema 24-June-2022

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிதான், ‘தேவர் மகன் 2’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முறையான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.