Priyanka Mohan, Tamil Cinema 24-June-2022

பிரபல ‘ஹாரிபாட்டர்’ படத்தில் வரும் ரயிலில் பிரியங்கா மோகன்! வைரல் வீடியோ

பிரியங்கா மோகன் ‘ஹாரிபாட்டர்’ படத்தில் இடம்பெறும் ரயிலில் உள்ள வீடியோ வைரல்!

பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‘ஹாரிபாட்டர்’ படத்தில் இடம்பெற்ற ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை நடிகை பிரியங்கா மோகன் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Priyanka Mohan, Tamil Cinema 24-June-2022

‘ஹாரிபாட்டர்’ படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் பார்ப்பவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு அந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் ‘ஹாரிபாட்டர்’ படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற Hogwarts Express ரயில் காட்சிகள் அனைவரையும் கவர்ந்திருக்கும். இந்த ரயில் லண்டனில் இருந்து புறப்படும் நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை வீடியோவாக நடிகை பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவிட்ட நிலையில் மூன்றரை லட்சம் லைக்ஸ்க்கும் அதிகமாக ரசிகர்கள் வாரி வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.