நெனச்சதொன்னு நடந்ததொன்னு – மாமனிதன்

Maamanithan Review

Maamanithan – 24th Jun 2022 – கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் ஹீரோ விஜய் சேதுபதி ஹீரோயின் காயத்ரி, மகன், மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஹீரோவுக்கு தனது குழந்தைகளை பெரிய ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்க ஆசைப்படுகிறார். இதற்காக அவர் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தி ரியல் எஸ்டேட் புரோக்கராகிறார் ஹீரோ.

Maamanithan Movie Review 24th Jun 2022

வழமையான திரைப்படம் போலவே இவரை நம்பி எல்லோரும் முதலீடு செய்கிறார்கள். நிலத்தை ரெஜிஸ்டராகும் நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் எல்லோரையும் ஏமாற்றி ஓடி விடுகிறார். இதனால் சிக்கல்களை சந்திக்கும் விஜய் சேதுபதியும் தப்பிக்க வீடு, குழந்தை, மனைவியை விட்டு ஓடி விடுகிறார். மீண்டும் விஜய் சேதுபதி, மனைவி குழந்தைகளுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஹீரோ விஜய் சேதுபதி நடுத்தர வர்க மனிதர்களின் தன்மையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் நடிப்பில் அசத்துகிறார் காயத்ரி. கிளைமாக்ஸ்ஸில் கண்கலங்க வைக்கிறார். இயக்குனர் சீனு ராமசாமி குடும்பத்திற்காக போராடும் மனிதன் மாமனிதன் என்பதைக் காட்டியிருக்கிறார் இயக்குனர். தனக்கான பாணியில் படத்தை எடுத்திருக்கிறார் சீனு ராமசாமி.

வழமையான கதையும் மெதுவான திரைக்கதையும் படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ரசிக்கும் படியாக உள்ளது. குறிப்பாக ‘நெனச்சதொன்னு நடந்ததொன்னு’ என்ற பாடல் தாளம் போட வைக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாகிறது. மொத்தத்தில் ‘மாமனிதன்’ சாதாரணம்.