ஆர்.ஜே பாலாஜி – விஜய் கூட்டணியின் படம் குறித்த செம செய்தி! வீடியோ வைரல்

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் விஜய் நடிப்பது குறித்து செம தகவல்!

தமிழ் திரையுலகில் ‘எல்கேஜி’ படம் மூலம் இயக்குனராக கால்தடம் பதித்தவர் ஆர்.ஜே பாலாஜி. தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்ல விசேஷம்’ ஆகிய தொடர் வெற்றி படங்களை கொடுத்த ஆர்ஜேபாலாஜி அடுத்ததாக விஜய்க்கு கதை கூறியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Vijay, RJ Balaji, Tamil Cinema 24-June-2022

இது குறித்து ஆர்.ஜே. பாலாஜி கூறிய வீடியோ ஒன்று வெளியாகிய நிலையில், அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “இந்த ஆண்டு ஜனவரி மாதம் விஜய் அவர்களுக்கு கதை சொல்லும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்று நான் நினைக்கிறன்.

அவருடன் கதை சொன்ன சில மணி நேரங்கள் எனக்கு மிகவும் பிடித்தது. நான் அவரிடம் கதை சொல்வதற்காக இரண்டு மாதங்கள் தயார் செய்தேன். 40 நிமிடங்கள் அவரிடம் ஒரு லைன் மட்டும் தான் கதை சொன்னேன். அந்த கதையை கேட்டு அவர் தனக்கு ரொம்ப பிடித்ததாகவும் ஆனால் அதே நேரத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ போல உங்க ஸ்டைலில் ஒரு கதையை எதிர்பார்த்தேன். இது ரொம்ப பெருசா இருக்கு என்று கூறினார்.

இந்த படத்திற்காக எவ்வளவு காலம் உங்களுக்கு தேவைப்படும்? என்று கேட்டார். அதற்கு நான் ஒரு வருடம் ஆகும் என்று கூறினேன். என்னப்பா சொல்றாய்.. ஒரு வருடமா? என்று விஜய் அவர்கள் கேட்டதற்கு ‘வீட்ல விசேஷம்’ என்ற படம் எடுத்து கொண்டிருக்கிறேன். அதை இயக்குவதற்கு 5 மாதம் ஆகியது. இந்தப் படம் மிகச் சரியாக வர வேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம்.

‘வீட்ல விசேஷம்’ மாதிரி சின்ன படம் எடுக்கும்போது அவ்வளவு காலம் என்றால் உங்களைப் போன்ற பெரிய ஸ்டார் வைத்து எடுக்கும் போது எவ்வளவு பெரிய கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நான் கூறினேன். அதற்கு அவர் தாராளமாக கதையை டெவலப் செய்யுங்கள்,கதை குறித்து எப்போது வேண்டுமானாலும் எனக்கு வந்து சொல்லு என்று கூறினார்.

தளபதி 67 இல்லை என்றால் தளபதி 77 இல்லை என்றால் தளபதி 87வது பண்ணுவேன் என்றும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கால அவகாசம் மட்டுமே வேண்டும் என்றும் அவரிடம் விட்டு வந்தேன் என்று விஜய்யிடம் கதை கூறிய அனுபவத்தை ஆர்.ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.