சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் அட்டகாசமான போஸ்டர் இணையத்தில் வைரல்!

கோப்ரா படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரல்!

சீயான் விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த சில வருடங்களாக உருவாகி வந்த ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Cobra, Vikram, Tamil Cinema 24-June-2022

இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை ‘கோப்ரா’ படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ளது.

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த சில ஆண்டுகளில் இருந்து எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.