ஹீரோவாக களமிறங்கும் மற்றுமொரு காமெடி நடிகர்!

நகைச்சுவை நடிகர் முனீஸ்காந்த் நடிக்கும் படம் குறித்த செய்தி!

முண்டாசுப்பட்டி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்டவர் நகைச்சுவை நடிகர் முனீஸ்காந்த். அடுத்து மாநகரம், மரகத நாணயம் போன்ற படங்களிலும் அவரின் அசத்தலான நடிப்பை வெளிக்காட்டியிருந்தார்.

Munishkanth, Tamil Cinema 23-June-2022

தொடர்ந்து பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வரும் முனீஸ்காந்த் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் வடிவேலு, சந்தானம், யோகி பாபு, மற்றும் சூரி போன்றவர்களின் வரிசையில் இவரும் கதாநாயகனாகிறாராம்.

இவர் நடிக்க உள்ள படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை விஜயலட்சுமியும் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெருவிக்கின்றன. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.