நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் தமிழ் சினிமாவில் இயக்குனராகும் ஆர். சுந்தர்ராஜன்!
தமிழ் சினிமாவில் நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் என பல திறமையை கொண்டவர் ஆர்.சுந்தர்ராஜன். இவரது இயக்கத்தில் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, ராஜாத்தி ராஜா, மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட படங்கள் இன்றும் தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளாக உள்ளன.

பின்னர் நாளடைவில் சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்த ஆர். சுந்தர்ராஜன் பல படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களிலும், காமெடி கதாப்பாத்திரங்களிலும் நடித்து நடிகராக முத்திரை பதித்துள்ளார். கடைசியாக அவர் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘சித்திரை நிலாச் சோறு’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அவர் தனுஷை நடிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.