RJ Balaji, Blue Sattai Maran, Tamil Cinema 23-June-2022

‘வீட்ல விசேஷம்’ படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை – விளாசிவிட்ட ஆர்ஜே பாலாஜி! வீடியோ வைரல்

ப்ளூ சட்டை மாறனுக்கு சரியான பதிலடி கொடுத்த ஆர்.ஜே பாலாஜி!

ஆர்.ஜே பாலாஜி நடித்த ‘வீட்ல விசேஷம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ்கள் திரையரங்குகளில் குவிந்து வருவதாகவும் தகவல்கள் தெருவிக்கின்றன. மேலும் பல திரையரங்க உரிமையாளர்கள் வார இறுதியில் இந்த படம் நல்ல வசூலை பெற்றதாகவும் வார நாட்களில் கூட ஓரளவு வசூலை பெற்று வருவதாகவும் பேட்டி அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RJ Balaji, Blue Sattai Maran, Tamil Cinema 23-June-2022

இந்நிலையில் ரஜினி, கமல், அஜித், விஜய் என எந்த பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலும் அந்த படத்தை கலாய்த்து விமர்சனம் செய்யும் புளூ சட்டை மாறன் ‘வீட்ல விசேஷம்’ படத்தையும் தனது பாணியில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அந்தவகையில் அவர் கூறுகையில், ‘எதோ டிராமா பார்த்தது போல இருக்கும் என்றும் படத்துக்கான நடிகர்கள் தேர்வு குறித்தும் ஜாடைமாடையாக கலாய்த்து இறுதியில் இப்படம் தமிழுக்கு புதிதாக இருந்தாலும் இன்னும் நன்றாக எடுக்கலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்திற்கு ஆர்.ஜே பாலாஜி வீடியோ ஒன்றின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் யாரை போய் சேர வேண்டும் என்று நாங்கள் நினைத்தோமோ, அவர்களிடம் நன்றாக போய் சேர்ந்திருக்கிறது என்றும், இந்த படத்தை வெளியிட்ட திரையரங்க உரிமையாளர்களும் படம் பார்த்த ரசிகர்களும் இந்த படத்தை சிறப்பாக பேசி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

எனவே எந்த பச்சை சட்டைக்க்கு பிடிக்க வேண்டும் என்று நினைத்தோமோ அவர்களூக்கு பிடித்துள்ளது என்றும், எந்த நீல சட்டைக்கும் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.