அமெரிக்காவில் இருந்து திரும்பும் சிம்பு – ‘பத்து தல’ படப்பிடிப்பு தொடர்கிறதா?

சிம்புவின் ‘பத்து தல’ படம் குறித்த தகவல்!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான ‘பத்து தல’ படத்தில் சிம்பு தவிர மற்ற நடிகர்களின் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் சிம்புவின் காட்சிகள் மற்றும் சிம்பு – கௌதம் கார்த்திக் இணையும் காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Simbu, Pathu Thala, Tamil Cinema 23-June-2022 001

இந்நிலையில் சிம்பு தனது தந்தை டி. ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அந்தவகையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ஜூலை மாதம் சிம்பு அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புவதாகவும் அதனை தொடர்ந்து ‘பத்து தல’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சிம்பு, பிரியா பவானி சங்கர், கெளதம் கார்த்திக், கலையரசன், மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூர்யா-ஜோதிகா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.