பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் இணையும் சூர்யா பட நடிகை!

சூர்யா பட நடிகை இணையும் பிரபல இயக்குனர் படம் குறித்த தகவல்!

நடிகர் சூர்யா தற்போது நடித்துவரும் ‘சூர்யா 41’ படத்தில் நாயகியாக நடித்து வருபவர் கீர்த்தி ஷெட்டி என்பது தெரிந்ததே. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள இவர் தற்போது ‘சூர்யா 41’ படத்தின் மூலம் தமிழில் கால்தடம் பதிக்கிறார்.

Naga Chaitanya, Krithi Shetty, Venkat Prabhu, Tamil Cinema 23-June-2022 001

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகவிருக்கும் தமிழ், தெலுங்கு போன்ற இருமொழி திரைப்படத்திலும் கீர்த்தி ஷெட்டி தான் நாயகி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘உப்பென்னா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கீர்த்தி ஷெட்டி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் லிங்குசாமியின் ‘தி வாரியர்’ படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Naga Chaitanya, Krithi Shetty, Venkat Prabhu, Tamil Cinema 23-June-2022

‘மாநாடு’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் நேற்று ஒரு பாடல் பதிவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.