Vijay, Kamal, Tamil Cinema 23-June-2022

பிறந்தநாளில் விஜய்யை நெகிழ வைத்த கமல்ஹாசன்! என்ன செய்தார் தெரியுமா?

பிறந்த நாளுக்கு விஜய்க்கு கமல் கொடுத்த சர்பிரைஸ்!

தளபதி விஜய் நேற்றய தினம் தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும், நேற்றைய பிறந்தநாள் மிகச் சிறப்பாக ரசிகர்களால் குதூகலமாக கொண்டாடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay, Kamal, Tamil Cinema 23-June-2022

இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நேற்று விஜய்யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் விஜய்க்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் ‘விக்ரம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் விஜய்யை ‘ஐயா’ என்று கமல்ஹாசன் அழைத்ததும் அனைவருக்கும் அது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இது குறித்து கமல்ஹாசன் விளக்கம் கொடுத்த போது, ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தன்னை ஐயா என்றுதான் அழைப்பார் என்றும் அந்த வகையில் தான் நான் விஜய்யை ஐயா என்று அழைத்தேன்’ என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் விஜய்யுடன் பணிபுரிவதற்கு தானும் தன்னுடைய ராஜ்கமல் நிறுவனமும் எப்பவும் தயாராக உள்ளோம் என்றும் கமல் தெரிவித்திருந்தார். எனவே விரைவில் கமல்ஹாசனுடன் விஜய் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.