Vijay, Nelson, Tamil Cinema 23-June-2022 001

நெல்சனிடம் மன்னிப்பு கேட்ட விஜய் ரசிகர்கள் – சம்பவம் இதுதான்!

விஜய் ரசிகர்களை நெகிழவைத்த நெல்சன்!

விஜய் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் விஜய் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அந்த வகையில் இயக்குனர் நெல்சன் டுவிட்டர் மூலம் தனது வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்த நிலையில், அந்த பதிவில் விஜய் ரசிகர்கள் நெல்சனிடம் மன்னிப்பு கேட்டு பதிவு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vijay, Nelson, Tamil Cinema 23-June-2022 001

நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்தும் வகையில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அவர்களே! உங்களுடைய பணிவு, தன்னம்பிக்கை, கவர்ச்சி என்னை ஆச்சரியப்பட வைத்தது. என்னுடைய வாழ்க்கையில் நீங்கள் ஒரு நண்பனாகவும், சகோதரனாகவும், நலவிரும்பியாகவும் இருப்பதற்கு நன்றி” என பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவு பார்ப்பவர்கள் மத்தியில் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டு வருகின்றனர். ‘பீஸ்ட்’ படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால் கடந்த சில மாதங்களாக நெல்சனை கலாய்த்து வந்த விஜய் ரசிகர்கள், விஜய் மீது நெல்சன் வைத்திருக்கும் பாசத்தை இந்த பதிவின் மூலம் அறிந்துகொண்டு அவரிடம் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

Vijay, Nelson, Tamil Cinema 23-June-2022

இயக்குனர் நெல்சன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்க இருக்கும் ‘ஜெயிலர்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை வெற்றி படமாக்கவே நெல்சன் மும்மரமாக வேலைபார்த்து வருகிறார். இந்த படம் மூலம் அவர் மீண்டும் திரையுலகில் ஒரு வெற்றி இயக்குனராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.