தனுஷ் படத்தின் ஃப்ஸ்ட் சிங்கிள் – வேற லெவல் வீடியோ!

தனுஷ் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து வைரல் வீடியோ!

தனுஷ் நடிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் மட்டும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Dhanush, Anirudh, Tamil Cinema 23-June-2022

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் 24 ஆம் தேதி முதல் வெளியாகும் என்றும் இந்த பாடலின் டைட்டில் ‘தாய்க்கிழவி’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பாடலை தனுஷ் எழுதியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் இணையம் இந்த படத்தின் பாடல்கள் மற்றையதை விட ஸ்பெஷலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush, Anirudh, Tamil Cinema 23-June-2022 001

வரும் ஆகஸ்ட் 18ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷ், இயக்குனர் இமயம் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.