‘பொன்னியின் செல்வன்’ முக்கிய கேரக்டரின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது – அதிர்ச்சியில் படக்குழு!

பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கு வந்த சோதனை!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Vikram, Karthi, Jayam Ravi, Ponniyin Selvan, Tamil Cinema 22-June-2022

இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முக்கிய கேரக்டர்களில் ஒன்றான ஆதித்த கரிகாலன் கேரக்டரின் புகைப்படம் இணையதளங்களில் லீக் ஆகியுள்ள நிலையில், படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் விக்ரம் குதிரையில் செல்வது போன்ற இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram, Karthi, Jayam Ravi, Ponniyin Selvan, Tamil Cinema 22-June-2022 002

அந்தவகையில் இது குறித்து படக் குழுவினர் விசாரணை செய்து வருவதாகவும், இந்த புகைப்படம் எப்படி லீக்கானது என்றே தெரியவில்லை என படக்குழுவினர் அதிர்ச்சியில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் லீக்கான புகைப்படத்தை நீக்கவும் படக்குழுவினர் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுபோன்று வேறு புகைப்படங்கள் வெளியாகாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.