விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர் – வைரலாகும் சூப்பர் புகைப்படம்!

விஜய்யை வாழ்த்தி புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்!

தளபதி விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்கள் மூலமாகவும் நேரிலும் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Vijay, Sivakarthikeyan, Tamil Cinema 22-June-2022

ஏற்கனவே இயக்குனர் வெங்கட்பிரபு, குஷ்பூ, சரத்குமார், வரலட்சுமி சரத்குமார், அனிருத், லோகேஷ் கனகராஜ், கலைப்புலி எஸ், தாணு உள்பட பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ‘பீஸ்ட்’ பாத்தின் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ பாடல் படப்பிடிப்பில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், “விஜய் சார் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் ‘வாரிசு’ திரைப்படத்திற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Vijay, Sivakarthikeyan, Tamil Cinema 22-June-2022 001

சிவகார்த்திகேயனின் இந்த புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.