தளபதி விஜய்யின் ‘வாரிசு’ மாஸ் செகண்ட் லுக் போஸ்டர் வைரல்!
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் படம் ‘வாரிசு’. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்க, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இன்று விஜய்யின் பிறந்தநாள் அவரது ரசிகர்களாலும், குடும்பத்தார்களாலும் கொண்டாடப்படும் நிலையில், நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருந்தது. அதில் விஜய் கோர்ட் சூட்டுடன் அமர்ந்திருப்பது மட்டுமே இருந்தது. வெறும் போட்டோ ஷூட் போல இருந்த வகையில், அது ஒருபக்கம் கொண்டாடப்பட்டாலும், இன்னொரு பக்கம் கிண்டல் கேலிக்கும் உள்லானது.
இந்நிலையில் ‘வாரிசு’ படத்தின் மற்றய இரண்டு போஸ்டர்கள் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்படி தற்போது வாரிசு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் குழந்தைகளோடு சில பொருட்கள் மத்தியில் படுத்திருந்து சிரித்தவாறு விஜய் உள்ளார். பொங்கல் ரிலீஸ் என்பதனை தெரியப்படுத்தும் வகையில், பக்கத்தில் கரும்பு கட்டும் கிடக்கிறது. முதல் போஸ்டரை விட இரண்டாவது போஸ்டர் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

#VarisuSecondLook pic.twitter.com/q1TZeuU9LW
— Vijay (@actorvijay) June 22, 2022