Kamal Haasan, Vijayakanth, Tamil Cinema 22-June-2022

விஜயகாந்த் குறித்து கமல்ஹாசன் தெரிவித்தது வைரல்!

கமல் சமூகவலைத்தளத்தில் விஜயகாந்த் குறித்து கூறியிருக்கும் தகவல்!

தமிழ் சினிமாவில் 80 – 90 களில் இருந்து முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். தனது ரசிகர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இவர் ஏராளமான உதவிகள் செய்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர் சில ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சாதனை படைத்தார்.

Kamal Haasan, Vijayakanth, Tamil Cinema 22-June-2022

சமீப காலமாக நடிகர் விஜயகாந்த் உடல் நடல்க்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசியல் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் பங்கெடுத்து வருகிறார். கட்சியை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு நீரிழிவு பிரச்சனையால் கால் விரலில் இரத்த ஓட்டம் இல்லாததால் அகற்றப்பட்டது. இந்த தகவல் தேமுதிக கட்சி தரப்பில் இருந்து வெளியானது.

இந்நிலையில் பலரும் விஜயகாந்த் விரைவில் குணமாக வேண்டும் என ட்வீட் செய்துவருகின்றனர். நேற்று நடிகர் ரஜினிகாந்த் டிவீட் செய்திருந்தார். அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் தன்னுடைய சமூகவலைத்தளத்தில் “மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து, முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன். விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.