Arun Vijay, Yaanai, Tamil Cinema 22-June-2022 00

நல்ல கதை அமைந்தால் அந்த ரோலிலும் நடிக்க தயார் – பிரபல நடிகர் தகவல்!

‘ஹீரோவாக மட்டுமல்லாது நல்ல கதை வந்தால் அப்பிடியும் நடிப்பேன்’ தெரிவித்த பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் 90 களில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். ஆனால் அவரது படங்கள் அவ்வளவு வரவேற்பை பெறாதநிலையில், அதன்பின் அவருக்கு பிரெக் கொடுத்த படம் ‘தடையற தாக்க’.

Arun Vijay, Yaanai, Tamil Cinema 22-June-2022

இப்படத்திற்குப் பின், அஜித் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் ‘விக்டர்’ கேரக்டரில் வில்லனாக நடித்தார். அதன்பின்னர், தற்போது, ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி கடலூரில் நடைபெற்றது.

அதில் பேசிய அருண் விஜய், ‘இப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இப்படத்திற்கு என்னால் முடிந்த ஒத்துழைப்புடன் கூடிய உழைப்பை கொடுத்திருக்கிறேன். மீண்டும் நல்ல கதையுள்ள படத்தில் வில்லனாக நடிக்கவும் தயாராக உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.