‘வாரிசு’ படப்பிடிப்புக்காக முக்கிய இடத்தில் முகாமிடும் படக்குழு! வெளியான செம தகவல்

விஜய்யின் வாரிசு குறித்து வெளியான புதிய அப்டேட்!

தளபதி விஜய் நடித்து வரும் 66-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, மற்றும் பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay, Rashmika, Thalapathy 66, Varisu, Tamil Cinema 22-June-2022

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை படத்தின் ஃப்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது. சமூகவலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது போலவே படத்துக்கு ‘வாரிசு’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் முழுப் படக்குழுவும் முகாமிட்டுள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்பட உள்ளதாகவும், படத்தில் இடம்பெறும் முக்கியமானக் கதாபாத்திரங்கள் அனைத்தும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.