Suriya, Jyothika, Dhiya, Tamil Cinema 21-June-2022

வெளியான சூர்யா-ஜோதிகா மகளின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள்!

சூர்யா – ஜோதிகா மகள் அனைவரையும் அதிர வைத்த 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள்!

நேற்று 10-ஆம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவை எதிர்பார்த்தார்கள். இந்நிலையில் சூர்யா – ஜோதிகாவின் மகள் தியா இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் தற்போது அவரது மதிப்பெண் பட்டியல் வெளிவந்துள்ளது.

Suriya, Jyothika, Dhiya, Tamil Cinema 21-June-2022

முதலாம் வகுப்பு முதலே நன்றாக படிக்கும் தியா, பத்தாம் வகுப்பில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மதிப்பெண்களை பெற்றுள்ளார். தமிழில் 95, ஆங்கிலத்தில் 99 அறிவியலில் 98 மற்றும் சமூக அறிவியலில் 95 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மேலும் அனைவரும் எதிர்பார்த்ததுபோல் கணக்கு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று தன்னுடைய பெற்றோருக்கும், தான் படித்த பள்ளிக்கும் பெருமை தேடி கொடுத்துள்ளார். இதனையடுத்து சூர்யா-ஜோதிகா குடும்பத்தினர் தியாவிற்கு வாழ்த்து தெரிவித்து இதனை கொண்டாடி வருகின்றனர்.

Suriya, Jyothika, Dhiya, Tamil Cinema 21-June-2022 001

அகரம் என்ற அமைப்பின் மூலம் பல ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்துகொண்டிருக்கும் சூர்யா தன்னுடைய மகளின் மதிப்பெண்களை பார்த்து நிச்சயம் பெருமை அடைந்து இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. சூர்யாவின் மக்களின் இந்த மதிப்பெண்கள் அவரின் கல்வி உதவி பெரும் மாணவர்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக அமையும் என்று கூறப்படுகிறது.