நயன் – விக்கி வெளியிட்ட புதிய ரொமான்டிக் புகைப்படங்கள் வைரல்!
பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன், கடந்த 9 ஆம் தேதி தனது 7 வருட காதலியான நயன்தாராவை திருமணம் செய்துகொண்டார். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் ஊரே வியக்கும்படி அவர்களின் திருமணம் நடைபெற்றது என்பது அறிந்ததே.

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருமணம் முடிந்த கையோடு கோவில்களில் சாமி தரிசனத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து தற்போது இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். தாய்லாந்தில் இருக்கும் போட்டோக்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஹனிமூன் சென்ற தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரெசார்ட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், அதில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் முகத்தோடு முகம் வைத்து ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களும் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

மேலும் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவின் முகத்தோடு முகம் வைத்திருக்கும் போட்டோவை பகிர்ந்து அவர் குறிப்பிடுகையில் என் தாரத்துடன் தாய்லாந்தில் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்க ஒரு இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் விக்கி என புகழ்ந்துள்ளனர்.