சிவகார்த்திகேயன் அடுத்த பட இசையமைப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரல்!
நடிகர் சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் தமனுடன் ‘பிரின்ஸ்’ படத்தின் கம்போஸிங்கில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘டான்’ படத்தின் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் மற்றும் பிரேம்ஜி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. ‘பிரின்ஸ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக், மற்றும் செகண்ட் லுக் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் தற்போது படத்திற்கு இசையமைக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் தமன் உடன் ‘பிரின்ஸ்’ படத்தின் கம்போஸிங்கில் கலந்து கொண்டுள்ளதுடன் படத்தின் இயக்குனர் அனுதீப்பும் அவர்களுடன் உள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.