மாஜி கணவரின் புது காதல் – விளாசிய சமந்தா!

நாக சைதன்யா – சோபிதா துலிபாலா காதல் குறித்த செய்திக்கு பதிலடி கொடுத்த சமந்தா!

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா காதல் மனைவியான சமந்தாவை பிரிந்த நிலையில், நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் அப்படி ஒரு தகவலை பரவச் செய்ததே சமந்தா மற்றும் அவரின் பி.ஆர். குழு தான் என கருத்து தெரிவித்திருந்தனர் நாக சைதன்யாவின் ரசிகர்கள்.

Naga Chaitanya, Samantha, Sobhita Dhulipala, Tamil Cinema 21-June-2022

நாக சைதன்யாவை பற்றி வதந்தி பரப்பிய சமந்தாவை ரசிகர்கள் விளாசுகிறார்கள் என்று செய்தி வெளியான நிலையில், அதை பார்த்த சமந்தா தனது சமூகவலைத்தளத்தில் கூறியிருப்பதாவது,
“பெண் குறித்த வதந்திகள் உண்மையாக இருக்க வேண்டும்!!
பையன் மீது வதந்தி – பெண்ணால் விதைக்கப்பட்டது !!
வளருங்கள் தோழர்களே..
சம்பந்தப்பட்ட தரப்புகள் தெளிவாக நகர்ந்துள்ளன.. நீங்களும் முன்னேறுங்கள்!! உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்… உங்கள் குடும்பங்களில் கவனம் செலுத்துங்கள்.. போங்கள்!!” என பதிலடி கொடுத்துள்ளார்.

Naga Chaitanya, Samantha, Sobhita Dhulipala, Tamil Cinema 21-June-2022 001

சமந்தாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.