Lokesh Kanagaraj, Vikram, Tamil Cinema 21-June-2022

‘விக்ரம்’ படத்தில் இருந்து ஒரு கேரக்டரின் கதையை தனிப்படமாக்க திட்டமிட்டுள்ள லோகேஷ்! வேற லெவல் அப்டேட்

லோகேஷின் பக்கா பிளானில் விக்ரம் படத்தில் இருந்து கிளை விடும் அடுத்த படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய ‘விக்ரம்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில், லோகேஷ் கனகராஜ் கோலிவுட் திரையுலகின் நம்பர் ஒன் இடத்தை நெருங்கி செல்கிறார் என்று கூறப்படுகிறது.

Lokesh Kanagaraj, Vikram, Tamil Cinema 21-June-2022

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது முன்னைய படங்களின் கேரக்டர்களை அடுத்தடுத்த படங்களில் இணைத்து வருவதை நோக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் ‘விக்ரம்’ படத்திற்கும் ‘கைதி’ படத்திற்குமான தொடர்பு குறித்து தகவல் ஏற்கனவே வந்த நிலையில், தற்போது ‘விக்ரம்’ படத்தின் கேரக்டர் ஒன்றை தனிப்படமாக இயக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெருவிக்கின்றன.

‘விக்ரம்’ படத்தின் மூன்றாம் பாகத்தை கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தனியாக உருவாக்க திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது ‘விக்ரம்’ படத்தில் அமர் என்ற கேரக்டரில் நடித்த பகத் பாசில் கேரக்டரை மட்டும் மேலும் மெருகூட்டி தனி திரைப்படமாக எடுக்க லோகேஷ் கனகராஜ் பக்காவாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Lokesh Kanagaraj, Vikram, Tamil Cinema 21-June-2022 001

‘விக்ரம்’ படத்தில் வரும் அமீர் கேரக்டரின் முன்னைய பகுதி குறித்த கதை குறித்து தனியாக ஒரு படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மற்றும் ‘கைதி’ திரைப்படத்தில் டில்லி கேரக்டரின் வாழ்க்கையின் நடந்த முந்தைய கதைதான் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக கூறப்பட்டது என்பதும் அறிந்ததே.