அஜித் அடுத்து சென்றிருக்கும் பிரசித்தி பெற்ற இடம் – செம புகைப்படங்கள்!

அஜித்தின் அடுத்த சுற்றுலா புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

தல அஜித் கடந்த சில நாட்களாக இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வரும் நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டிலிருந்து அவர் பெல்ஜியம் நாட்டிலும் அட்லாண்டிக் கடல் வழியே செல்லும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Ajith, AK 61, Tamil Cinema 21-June-2022

இங்கிலீஷ் சேனலை கடப்பதற்காக அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலில் அஜித் சென்ற போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை அவருடன் சென்ற குழுவினர்களில் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படங்கள் அஜித் ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் 26 ஐரோப்பிய நாடுகளிற்கு அஜித் பைக் பயணத்தை மேற் கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Ajith, AK 61, Tamil Cinema 21-June-2022 001

இந்நிலையில் அஜீத் ‘ஏகே 61’ படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் இந்தியா திரும்புவார் என்றும் புனேவில் நடைபெற இருக்கும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் மஞ்சுவாரியர் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் கூறப்படுகிறது.