நட்டி நட்ராஜ் பகிர்ந்த பரபரப்பான தகவல்!
‘இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன்..தேசமே தெய்வம்..’ என்றும் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நடராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி வருகிறது. வட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்து ரயில்களில் தீ வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட தொழில் அதிபர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பதும் அக்னிபாத் திட்டத்தில் பணி முடிந்த வீரர்களுக்கு தங்களது நிறுவனத்தில் வேலை கொடுப்போம் என்றும் கூறி வருகின்றனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் நட்டி நடராஜ் தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்த நிமிஷம் எனக்கு இராணுவத்தில் சேர அனுமதி கிடைத்தால் அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன் என்றும் தேசமே தெய்வம்’ என்றும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது மடுவின்றி, அதற்கு ஆதரவாகவும் எதிர்கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன்..தேசமே தெய்வம்..🙏🙏🙏
— N.Nataraja Subramani (@natty_nataraj) June 19, 2022