மாதவனின் ‘ராக்கெட்ரி’ அசத்தலான புதிய போஸ்டருடன் கூடிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘ராக்கெட்ரி’ படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!

நடிகர் மாதவன் இயக்கி, நடித்து, தயாரித்த ‘ராக்கெட்ரி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

R. Madhavan, Rocketry, Tamil Cinema 21-June-2022 001

பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு கதையான ‘ராக்கெட்ரி’ திரைப்படத்தில் நடிகர் மாதவன், நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இந்த படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் அசத்தலான புதிய போஸ்டர் வெளியாகி ஜூலை 1 இல் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாவதை உறுதி செய்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

R. Madhavan, Rocketry, Tamil Cinema 21-June-2022

மாதவன், சிம்ரன், ரவி ராகவேந்திரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.